Categories: Cinema News latest news throwback stories

அந்த நடிகையுடன் காதலா?.. நிருபர் கேட்ட கேள்வியில் கடுப்பாகி ரஜினி செஞ்ச காரியம்…

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றிய ரஜினி பின் சினிமாவிற்குள் நுழைந்தார். சினிமா மீது இவருக்கு ஏற்பட்ட ஆர்வமே இதற்கு காரணம்.

ஆனால் இவருக்கு ஆரம்பத்தில் சினிமாவில் வில்லனாக நடிக்கவே வாய்ப்பு அமைந்தது. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ரஜினிகாந்த் மெல்ல மெல்ல சினிமாவில் முன்னேற ஆரம்பித்தார். இவர் மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற திரைப்படங்களிலும் வில்லனாகவே நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:சினிமாக்காரனை கொண்டு வந்து அரசியல்ல நிறுத்தாதே!… அப்போதே சொன்ன எம்.ஆர்.ராதா

இப்படி வில்லனாக நடித்த ரஜினிக்கு பைரவி திரைப்படத்தின் மூலம்தான் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் அவர் அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

பொதுவாக பத்திரிக்கைகளில் கிசுகிசு எழுதுவது வழக்கம். அப்படி ரஜினி வாழ்விலும் சம்பவம் நடந்துள்ளது. முல்லும் மலரும் திரைப்படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது நடிகை லதாதானாம். ஆனால் ரஜினிகாந்துக்கும் லதாவுக்கும் அந்த சமயத்தில் காதல் என வதந்தி பரவியதாம். மேலும் அந்த காலத்தில் எம்ஜிஆர் தன்னுடன் நடித்த நடிகைகள் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என சில வரைமுறைகள் வகுத்திருந்ததால் லதா அப்படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

இதையும் வாசிங்க:சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டேன்… ஹீரோவான காரணத்தை உடைத்த அமீர்…

அப்போது ஒரு நாள் ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது லதா ரஜினி காதல் வதந்திகளை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ரஜினிகாந்த் கோபத்தில் எழுத்து வந்துவிட்டாராம். வந்தவர் அப்படத்தின் இயக்குனரான மகேந்திரனிடம் அவங்க இஷ்டத்துக்கு கேள்வி கேட்பாங்க… நான் பதில் சொல்லணுமா? என கேட்டாராம். அதற்கு மகேந்திரன் தான் ஏற்கனவே பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் ரஜினியிடம் ஒரு அறிவுரை கூறினாராம்.

பத்திரிக்கையாளர்கள் அப்படிதான் கேள்வி கேட்பார்கள். வாழ்வில் எந்தகட்டத்திலும் பத்திரிக்கையாளர்களை மட்டும் பகைத்து கொள்ளாதீர்கள்.. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இஷ்டம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.. இல்லையென்றால் நோ கமெண்ட் சொல்லிவிடுங்கள் என்றாராம். அவரின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் பின் திரும்பவும் வந்து பத்திரிக்கையாளர்களுக்கு நிதானமாக பதிலளித்தாராம்.

இதையும் வாசிங்க:அமீருக்கு ஓகே சொன்ன விஜய்… இருந்தும் டேக் ஆஃப் ஆகாததற்கு காரணம் என்ன தெரியுமா?…

amutha raja
Published by
amutha raja