கோபத்தில் காரில் வரும்போதே அறிக்கை! இனி கமல், ரஜினி குட்புக்கில் சுந்தர்.சி இல்லை!...
தக் லைப் திரைப்படம் கமலுக்கு 150 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் நடித்து கொடுப்பதாக ரஜினி சம்மதித்திருக்கிறார் என செய்திகள் வெளியானது. அதில் ஒன்றுதான் சுந்தர்.சி இயக்கவிருந்த படம் என சொல்லப்பட்டது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு சென்ற சுந்தர்.சி அங்கு ரஜினி, கமலோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதன் சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு தலைவர் 173 செய்தியை வெளியிட்டார்கள்.
கடந்த பல வருடங்களாகவே ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து வந்த ரஜினி சுந்தர்.சி இயக்கத்தில் நடித்தால் அது ஒரு ஜாலியான படமாக வெளியாகும் என ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர்.சி. ஒரு ஹாரர் கலந்த காமெடி கதையை அவர் ரஜினியிடம் சொன்னதாகவும், ரஜினிக்கு கதை பிடிக்கவில்லை என்பதால் சுந்தர்.சி இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.
அதன்பின் வெவ்வேறு காரணங்கள் வெளியானது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை இயக்க வேண்டும்.. ரஜினி 2026 மார்ச் மாதத்திற்குள் ஷூட்டிங் துவங்க சொல்கிறார்.. கதையை பலரிடமும் சொல்ல சொல்கிறார்கள் என்பது போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ‘ரஜினி கதை பிடிக்கவில்லை என்று சொன்னதும் அவரின் வீட்டை விட்டு வெளியே வந்த சுந்தர்.சி காரில் ஏறிய உடனே போன் செய்து அந்த அறிக்கையை வெளியிட சொல்லியிருக்கிறார்.. அதன் மூலம் ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.
கண்டிப்பாக இனிமேல் ரஜினி, கமல் ஆகியோரின் குட்புக்கில் சுந்தர்.சி இருக்க மாட்டார். சுந்தர்.சி தொடர்பான நிகழ்ச்சிகளோ அல்லது வீட்டு நிகழ்ச்சிகளிலோ கண்டிப்பாக அவர்கள் இருவரும் கலந்து கொள்ளமாட்டார்கள்’ என அவர் பேசியிருக்கிறார்.
