Connect with us

Cinema News

ஒரே நாளில் ரஜினியை மயக்கிய லதா… காதலை சூப்பர்ஸ்டார் யார்கிட்ட முதலில் சொன்னாரு தெரியுமா..?

Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய காதலியை ஒரே நாளில் முடிவெடுத்து அதை சொன்ன ஆள் யார் தெரியுமா? இவர்களின் காதல் கதை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. சின்ன வயதில் ரொம்ப துள்ளலாக வலம் வருவாராம் ரஜினிகாந்த்.

பெங்களூருவில் பஸ் கண்டக்டராக பணியாற்றியபோது, ​​மருத்துவ மாணவியாக இருந்த நிர்மலா என்ற பெண்ணை விரும்பினாராம். இருவரும் காதலிக்க தொடங்கினார். ரஜினியை நடிக்க ஊக்கப்படுத்துவாராம். அவர் தான் ரஜினிக்காக அடையாறு திரைப்பட நிறுவனத்திற்கு விண்ணப்பம் போட்டாராம். அதையடுத்து ரஜினிக்கு அட்மிஷன் கிடைக்க நடிப்பு வாழ்க்கையை கதவு திறக்க, காதலியின் தொடர்பு அறுந்ததாம். 

இதையும் படிங்க: சின்னவீடு படத்தால் நடந்த களேபரம்… கடைசியில் மன்னிப்பே கேட்கும் நிலைக்கு போனாராம் பாக்கியராஜ்..!

இதையடுத்து உச்சத்தில் இருந்த ரஜினிகாந்துடன் பல நடிகைகளுக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவியான லதா ரங்காச்சாரியை மணந்தார். இவர்கள் திருமணம் 26 பிப்ரவரி 1981 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் நடைபெற்றது. 

ஆனால் ரஜினியின் காதல் கதை ரொம்பவே சிம்பிள்ளாக இருக்குமாம். ஏவி.எம். தயாரித்த முரட்டுக்காளை படத்தில், ரஜினியுடன் மகேந்திரனும் நடித்தார். ரஜினிக்கும், மகேந்திரனுக்கும் அப்போதே நெருங்கிய நட்பு இருந்ததாம். அப்போது கல்லூரி இதழுக்காக மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா, ரஜினியை பேட்டி காண விரும்புகிறார்.

இதையும் படிங்க: ஹாலிவுட்டில் கால் பதித்த சமந்தா.. அவெஞ்சரின் புதிய கேப்டன் மார்வலா..? வெளியான வீடியோ…

முதலில் புரியாத மகேந்திரன் அவங்க உன்னை விட வயது மூத்தவங்களே என நடிகை லதாவை பற்றி குறிப்பிடுகிறார். உடனே ரஜினி குறுக்கிட்டு நான் சொன்னது உன் மைத்தினி லதாவை என்றாராம். இதனால் சந்தோஷமான மகேந்திரன் விளையாட்டாக என்னய்யா! அடிமடியில் கை வைக்கிறே என்றாராம். இதையடுத்தே இரு வீட்டாரும் பேசி முடித்து இந்த திருமணம் நடந்ததாம்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top