Connect with us

Cinema News

தன் ரோல் டம்மியென தெரிந்தும் ரஜினிக்காக நடித்த சிவாஜி.. அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்டே!

Sivaji Ganesan: ரஜினியுடன் இணைந்து நடித்த ஒரு திரைப்படத்தில் தன்னுடைய கேரக்டர் பெரிய அளவில் பேசப்படாது என தெரிந்தும் சிவாஜி நடித்து கொடுத்தாராம். அப்படத்தை பார்த்துவிட்டு சிவாஜி சொன்ன ஒரு கமெண்டும்  பெரிய அளவில் பேசப்பட்டதாம்.

நடிகை கே.ஆர்.விஜயாவும், அவர் கணவர் வேலாயுத நாயரும் தயாரித்த படம் தான் நான் வாழ வைப்பேன். இந்தியில் வெளியான மஜ்பூர் படத்தினை தழுவி தமிழில் தயாரிக்கப்பட்டது. அமிதாப் நடித்த கேரக்டரில் சிவாஜி கணேசனும், பிரான் கதாபாத்திரத்தில் ரஜினியும் நடிக்க இருந்தனர்.

இதையும் படிங்க: கண்ணாடி போல சேலை!.. கண்ட அழகையும் காட்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்!..

திரைக்கதை எழுத யோகானந்த் டைரக்ட் செய்தார். இந்தி படத்தினை ஷூட்டிங் தொடங்கும் முன்னர் சிவாஜி தன்னுடைய நண்பர் ஆரூர்தாஸுடன் பார்த்தார். இதில் அமிதாப் ரோல் டம்மி. கெஸ்ட் ரோலான பிரான் தான் நின்று பேசுகிறது. நான் அந்த ரோலில் நடிக்கவா என்கிறார் சிவாஜி. இதைக் கேட்டு ஆரூர்தாஸ் ரஜினியை ஹீரோவாகவும், உங்களை கெஸ்ட் ரோலாகவும் போட்டால் விநியோகிஸ்தர்கள் ஒப்புக்கொள்வார்களா?

தயாரிப்பாளர் நிறைய நினைத்து பாருங்கள் என்றாராம். ஆமா விஜயாவிற்காக நான்  நடிச்சு தான் ஆகணும். ரஜினி இப்போதான் வளந்துகிட்டு வரும். இந்தப் படமும் அவனுக்குப் பயன்படட்டுமே என்றாராம். நான் வாழ வைப்பேன் படப்பிடிப்பு முடிந்து, பிரிவியூ ஷோவை சிவாஜி பார்த்தார். கிளைமேக்ஸில் ரஜினியின் நடிப்பைப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸை சிவாஜி அழைத்தாராம்.

இதையும் படிங்க: 33 முறை விஜயகாந்துடன் மோதிய பிரபு படங்கள்!.. அதிகமுறை ஜெயித்தது இளைய திலகமா? புரட்சிக்கலைஞரா?..

பார்த்தியா! ரஜினி ரோல்தான் நிக்கும் சொன்னேன்ல. படம் முடிஞ்சு ரசிகர்கள் போகும்போது, ரஜினிதான் மனசுல நிற்பான். பரவாயில்லை. தெரிஞ்சுதானே நடிச்சேன். படம் நல்லா வந்திருக்கு. அதுதான் வேணும் என்றாராம். 1979ல் வெளியான “நான் வாழவைப்பேன்” நூறு நாள் ஓடி  வெற்றி பெற்றது.

Continue Reading

More in Cinema News

To Top