
Cinema News
சூர்யாவுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ரஜினி!.. கருப்புக்கு வந்த விடிவு காலம்!..
Karuppu: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. இப்படத்தை சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. இப்படம் தற்போது முடிவடைந்துவிட்டாலும் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படங்கள் அமையவில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த Kanguva படம் பெரிய தோல்வியை அடைந்தது. அதன்பின் வெளியான Retro படம் சுமாரான வெற்றியை பெற்றது. எனவே ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக சூர்யா காத்திருக்கிறார்.
கருப்பு படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது இப்படம் பக்கா கமர்சியல் மசாலாக வந்திருப்பது புரிகிறது. எனவே கண்டிப்பாக இப்படம் சூர்யாவுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என கணிக்கப்படுகிறது. ஆனால் ஆர்.ஜே.பாலாஜிக்கும், தயாரிப்பாளருக்கும் வந்த பிரச்சினைகள், இன்னும் சில காட்சிகளை எடுக்க வேண்டி இருப்பது மற்றும் இப்படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விற்கப்படாமல் இருப்பது என்பது உள்ளிட்ட சில காரணங்களால் இப்படத்தில் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாமல் இருக்கிறார்கள்.
அதன்பின் இப்படத்தை 2026 ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ஏப்ரல் 14ம் தேதிக்கு வருவதால் இப்படத்தில் ரிலீஸை ஏப்ரல் 9ம் தேதிக்கு மாற்றியதாக சொல்லப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் தேதி என அறிவிக்க கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையிலில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய ரஜினி Jailer 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லிவிட்டார். அனேகமாக ஜூன் 12ம் தேதி ஜெயிலர் வெளியாகும் என்கிறார்கள். இது கருப்பு பட டீமுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே ஏப்ரல் 14ஆம் தேதி கருப்பு திரைப்படம் கண்டிப்பாக ரிலீசாகும் என தெரிகிறது.