ரஜினிகாந்த்
கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை சென்னையில் கைது செய்யப்பட்டாராம். அதுவும் கொலை செய்ய முயன்ற வழக்குக்காக என்றால் நம்ப முடிகிறதா? அப்படிப்பட்ட ஒரு ஷாக் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது.
80ஸ் காலகட்டத்தில் ரஜினிகாந்த் கொஞ்சம் கோபக்காரராகவே வலம் வந்தார். அப்படி இருக்க ஒருநாள் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். அதற்கு காரணமாக இருந்தவர் சினிமா பத்திரிக்கையாளராக இருந்த ஜெயமணி தான். அவர் அளித்த புகாரில் என்ன இருந்தது என்றால் சென்னை மியூசிக் அகாடமி பக்கத்தில் ஜெயமணி நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு காரில் வந்த ரஜினிகாந்த் என்னை பார்த்ததும் ஏற்றி கொள்ள முயன்றார். நான் சுதாரித்து தப்பித்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
Super Star Rajinikanth
அதை தொடர்ந்து 1979, மார்ச் 7ந் தேதி ராயபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் ரஜினிகாந்தினை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்து பின்னர் ஜாமீன் விடுவித்தனர். மிரட்டுவது, ஆபத்து விளைவிக்க கூடிய வகையில் பிரச்சனை தருவது என இரு பிரிவில் அவரின் மீது வழக்கு இருந்தது.
ரஜினிகாந்த்
இதை தொடர்ந்து, ரஜினிகாந்த் அளித்த வாக்குமூலத்தில் என்னிடம் லைன்சென்ஸ் இல்லை. டிரைவரும் இல்லை. நானே காரை இயக்கி சென்றேன். அப்போது ஜெயமணியை சாலையில் பார்த்தேன். அவர் என்னை குறித்து தவறாக எழுதியது எல்லாம் நியாபகத்துக்கு வந்தது. காரை அவர் அருகில் கொண்டு நிறுத்தினேன். ஜெயமணி தான் என்னை பார்த்து செருப்பை காட்டினார். நான் கடுப்பில் அவர் சட்டையை மட்டுமே பிடித்தேன் எனக் கூறினாராம். இதை தொடர்ந்து இந்த வழக்கு முடிந்ததாக கூறப்படுகிறது.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…