ரஜினியின் 'தலைவர் 173' ஷூட்டிங்கை துவங்கிய அஸ்வத் மாரிமுத்து... ஆனாலும், சிபியை விடாமல் லாக் செய்த கமல்!

 
thalaivar 173

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு 'ஜெயிலர் 2', 'தலைவர் 173', 'KHxRK Reunion' படம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கிறது.

இதில் 'தலைவர் 173' படத்தை முதலில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக இருந்து, பின் அவர் விலகி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கமிட்டாகி, அதன் பிறகு அவருக்கும் ரெட் சிக்னல் கொடுத்துவிட்டு 'டிராகன்' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் கதைக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார் ரஜினி.

நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறாராம்.

விரைவில் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிலிருந்து ரஜினியும் கலந்து கொள்வாராம். இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைக்கவுள்ளார். ஏற்கனவே, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றாலும், கமலின் 'RKFI' நிறுவனத்துக்கு பிடித்திருப்பதால், அவரை இன்னும் வெளியே அனுப்பவில்லையாம்.

From Around the web