×

நீ தெய்வம் யா... ரசிகருக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் இருக்கும் ரசிகனுக்காக உருகிய ரஜினி

 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவருக்கு ஒன்னுன்னா எல்லோரும் ஒன்று கூடுமளவிற்கு  ஜன பலத்தை வைத்திருப்பவர் ரஜினி. அதே போன்று அவரும் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்.

அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் தற்ப்போது நடந்துள்ளது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கொரோனா தொற்று தாக்கப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது உடல்நிலை மோசமடைந்ததை உணர்ந்த அவர் கடைசியாக ரஜினி பற்றி உருக்கமாக ட்விட் செய்திருந்தார். அதில்,  தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச் சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி தாருங்கள்.

இன்னும் உன் வெற்றிகளை கண்டு உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே ஒரு வருத்தம் தான் என்னுள் உள்ளது. என கூறி உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக சற்றுமுன் ரஜினிகாந்த் இதுகுறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " முரளி.. நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா... விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.  தைரியத்துடன் இருக்க வேண்டும். குணம் அடைந்த பிறகு குடும்பத்தினருடன் என் வீட்டிற்கு வாங்க நான் பார்க்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளார். ரசிகனுக்காக ரஜினி செய்துள்ள இந்த காரியம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

null 

From around the web

Trending Videos

Tamilnadu News