
Cinema News
இயக்குனர் சொன்னதை அப்படியே செஞ்ச ரஜினிகாந்த்… ஓவர் சீன் போட்ட இன்னொரு நடிகர்..
Published on
By
Rajinikanth: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் அத்தனை எளிதாக எல்லாம் நடந்துவிடவில்லை. அதுக்கு அவர் நிறைய உழைத்து இருக்கார். உச்சத்தில் இருந்தால் கூட எப்போதுமே அவர் இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்பாராம். அப்படி ஒரு சம்பவம் நடந்தும் இருக்கிறது.
ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே சினிமாவுக்காக எதையும் தியாகம் செய்யும் மன பக்குவத்திலே தன்னை வளர்த்துக் கொண்டவர். அதை அப்படியே தொடர்ந்து செய்வதையும் வழக்கமாக வைத்து இருக்கார். தன்னுடைய படங்களில் என்ன சொன்னாலும் அப்படியே செய்வாராம்.
இதையும் படிங்க: தனக்கு வாழ்க்கை கொடுத்த பிரபல இயக்குனரை அசிங்கப்படுத்திய அஜித்… ஆனா இப்படிலாமா பேசுவீங்க?
பஞ்சு அருணாச்சலம் எழுதி ராஜசேகர் இயக்கிய திரைப்படம் தம்பிக்கு எந்த ஊரு?. இப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, சுலேக்ஷனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஒரு காட்சியில் ரஜினியின் சட்டை, பேண்ட் எல்லாம் சகதியாகி இருக்க வேண்டும்.
இதற்கு முன்னரே ஒரு பிரபல நடிகரின் படத்தினை இயக்கிய போது ராஜசேகருக்கு ஒரு கசப்பான அனுபவம் இருந்ததாம். அதாவது இதே போல ஒரு சேறும், சகதியுமான ஒரு காட்சிக்கு நடிகரை தயார்படுத்த கூறி இருக்கிறார். ஆனால் அந்த நடிகரோ எனக்கு அதெல்லாம் அலர்ஜி.
இதையும் படிங்க: கோட் திரைப்படத்தில் விஜயிற்கு வில்லனாகும் ’சூப்பர்ஸ்டார்’… கோட் படத்தின் ஆச்சரிய அப்டேட்கள்
அதனால் பேன் கேக் மாவை கொண்டு சகதியாக பூசிக்கொள்கிறேன் என்றாராம். அவரே அப்படி சொல்லும் போது ரஜினி எப்படி நடிப்பார் என நினைத்தவர். ரஜினிக்கும் அப்படி ஒரு மாவை தான் தயார் செய்ய தன்னுடைய உதவி இயக்குனர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையை ரஜினி கேட்டுக்கொண்டு இருந்தாராம்.
உடனே எழுந்தவர் நேராக ரோடு ஓரத்தில் இருந்த சாக்கடைச் சகதியை அள்ளி மேலே பூசிக் கொண்டு தன்னை ரெடி செய்துக்கொண்டாராம். நேராக இயக்குனர் ராஜசேகரிடம் வந்து நான் ரெடி சார் என்றதும் அவர் விக்கித்து போய் நின்றாராம். யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் ரஜினியின் செயலால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனராம்.
இதையும் படிங்க: வடிவேலு மன்னிப்பு கேட்கனும்! குற்ற உணர்வோடவே வாழ வேண்டியதுதான்.. நச்சுனு சொன்ன நடிகர்
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...