×

அப்ப எல்லாமே பொய்யா!.. போயஸ்கார்டனில் ரூ.150 கோடி வீடு.. மகளுக்கு கட்டித்தரும் ரஜினி.....

 
rajinikanth

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டிருக்கு அருகே ஒரு புதிய வீட்டை அவர் கட்டி வருகிறார் எனவும் இந்த வீட்டின் மதிப்பு ரூ.150 கோடி எனவும் செய்திகள் வெளியானது. இந்த வீட்டின் வேலை துவங்கியது போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த வருடமே வெளியாகி வைரலாகியது. தற்போது அந்த வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 8 கிரவுண்டு நிலம் மட்டும் ரூ.80 கோடி. அதில் ரூ.70 கோடி செலவில் தனுஷ் வீட்டை கட்டி வருவதாக கூறப்பட்டது. 

danush

ஆனால், அதில் பாதி உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ரஜினி தற்போது தான் வசிக்கும் போயஸ்கார்டன் வீட்டை இளைய மகள் சௌந்தர்யாவுக்கு எழுதி வைத்துவிட்டாராம். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் அதே மதிப்பில் வீடு கொடுக்க வேண்டும் என எண்ணிய விஜய், தனது வீட்டின் அருகிலேயே 8 கிரவுண்டு நிலத்தில் வீடு கட்டி தருகிறாராம். அந்த வீட்டின் பணிதான் தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, அது தனுஷ் தனது சொந்த செலவில் கட்டும் வீடு அல்ல. ரஜினி தனது மகளுக்கு கட்டித்தரும் வீடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பீடு ரூ.150 கோடி எனக்கூறப்படுகிறது.

rajini

இதை வைத்து பார்க்கும் போது ரஜினி தனது மகள்களுக்கு தனது சொத்துக்களை பிரித்து தரும் வேலையில் இறங்கிவிட்டார் என்பது நமக்கு புரியவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News