×

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி..

 
Rajini 2-1454212653-1580816964

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் ரஜினி. தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளது. 25 வருடங்களுக்கு முன்பு எப்போது அவர் அரசியல் ரீதியான கருத்துக்களை கூறினாரோ, அப்போது முதலே அவர் அவர் அரசியலுக்கு வருவார் என மக்களும், அவரின் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். எனவே, ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜின் மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டது. ஆனால், பல கட்ட பரபரப்புகளுக்கு பின் உடல் நிலையை காரணம் காட்டி தான் அரசியுலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினி ஏற்கனவே அறிவித்துவிட்டார். 

rajini

இந்நிலையில், இன்று காலை தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என தெரிவித்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் ரசிகர் மன்றங்களாக மாற்றுவோம் என அவர் கூறினார். இதை அவரின் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்ட நிலையில், ஒரு அறிக்கையை ரஜின் வெளியிட்டுள்ளார்.

அதில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. எனவே, ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

notice

From around the web

Trending Videos

Tamilnadu News