×

வேதனையாக இருக்கிறது...அப்புறம் உங்க இஷ்டம்...ரஜினி அறிக்கை..

 

உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். ஆனால் ரஜினியை தவிர தமிழகத்தில் வேறு யாரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரின் ரசிகர்கள் சிலர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஏன் அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான  காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கிவிட்டேன். என் முடிவை நான் கூறிவிட்டேன். தயவுசெய்து இதன்பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை வேதனைப்படுத்த வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News