பாக்யராஜின் திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது... ரஜினி இரங்கல்!
கோலிவுட்டில் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்பட்டு வந்தவர் கே.பாக்யராஜ். இயக்குநரும், நடிகருமான இவர் இன்று காலை காலமானார்.
தற்போது, கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் "ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு.பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்து 1985 ஆம் ஆண்டு வெளியான படம் 'நான் சிகப்பு மனிதன்'. இதில் ரஜினியுடன் இணைந்து கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
— Rajinikanth (@rajinikanth) June 27, 2026
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர்…
