×

அண்ணாத்த என் கடைசி படமா? என் உடல் நிலை ஒத்துழைக்குமா?... கண்கலங்கிய ரஜினி!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் துவங்கும் முன்பே படப்பிடிப்பை துவங்கினார்கள்.
 
895694_rajinikanth_delhiviolence

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் துவங்கும் முன்பே படப்பிடிப்பை துவங்கினார்கள். கொரோனா பிரச்சனை ஏற்பட்டதும் பல மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பை துவங்கினார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அதன் பிறகு வீடு திரும்பி ஓய்வு எடுத்த ரஜினி, அண்ணாத்த படமே தன் கடைசி படமாக இருந்துவிடுமோ என்று பயமாக இருப்பதாக தன் நண்பர்களிடம் கூறி கண் கலங்கியிருக்கிறார். உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் மத்தியில் பேசியிருக்கிறார் ரஜினி. அப்பொழுது அவர் தன் ஆசை மற்றும் பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அண்ணாத்த தவிர்த்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்குமா, தொடர்ந்து நடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அண்ணாத்த என் கெரியரின் முக்கியமான படம். அந்த ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று கவலையில் இருந்தேன். படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது என்று கூறி ஃபீல் செய்திருக்கிறார் ரஜினி.

From around the web

Trending Videos

Tamilnadu News