Thalaivar 173: ரஜினி முடிவு சரியா?.. சிபி சக்ரவர்த்தி சரியா வருமா?.. ஒரு அலசல்…

 
Thalaivar 173: ரஜினி முடிவு சரியா?.. சிபி சக்ரவர்த்தி சரியா வருமா?.. ஒரு அலசல்…

ரஜினியின் 17-வது படத்தை இயக்கப்போவது டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி என அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், 2027 பொங்கல் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினியின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, அதன்பின் அவர் வெளியேறி, அதன்பின் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெயர் அடிபட்டு, தற்போது சிபி சக்ரவர்த்திதான் இயக்குனர் என அறிவித்து டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போவது சிபி சக்கரவர்த்தி என யாருமே எதிர்பார்க்கவில்லை. ரஜினியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அதற்கு காரணம் சினிமாவில் 50 வருட அனுபவம் பெற்றுள்ள ரஜினி ஒரே ஒரு படத்தை இயக்கியுள்ள ஒருவரை தனது புதிய படத்தின் இயக்குனராக தேர்வு செய்திருக்கிறார்.

Thalaivar 173: ரஜினி முடிவு சரியா?.. சிபி சக்ரவர்த்தி சரியா வருமா?.. ஒரு அலசல்…

அந்தியூரை சொந்த ஊராகக் கொண்ட சிபி சக்கரவர்த்தி அடிப்படையில் இன்ஜினியரிங் பட்டதாரி. கல்லூரியில் படித்த போது அவர் சந்தித்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து டான் படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இந்த படம் 2022ம் வருடம் வெளியாகி 100 கோடி வசூலை அள்ளியது. அதேநேரம் ‘நூறு கோடி வசூல் செய்யுமளவுக்கு இந்த இடத்தில் என்ன இருக்கிறது?.. படம் முழுக்க நிறைய கிரின்ச் மட்டுமே இருந்தது. அதிலும், சமுத்திரக்கனி வேடம் செம கிரின்ச்.. இது ரசிகர்களுக்கு எப்படி பிடித்தது என தெரியவில்லை’ என்று அப்போது பலரும் சொன்னார்கள்.

ரஜினி படத்தை இயக்க அனுபவம் வேண்டும். கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பி.வாசு போன்ற இயக்குனர்களுக்கு ரஜினிக்கான கதையை எப்படி எழுத வேண்டும்? அவரிடம் அவர்கள் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? என்பது தெரியும். ஆனால் வயதில் முகவும் குறைவான, இயக்கத்தில் பெரிய அனுபவமே இல்லாத சிபி சக்ரவர்த்தி ரஜினி படத்தை எப்படி ஹேண்டில் செய்வார் என்பது தெரியவில்லை.

அவர் சொன்ன கதை நன்றாகவே இருந்தாலும் ரஜினிக்கு ஏற்ற மாதிரி அந்த கதையை வடிவமைக்க வேண்டும்.. ரஜினிக்கு பொருந்துகிற மாதிரி காட்சிகளை வைக்க வேண்டும்.. ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும்.. அதற்கு சினிமாவில் நிறைய அனுபவங்கள் வேண்டும். இது எதுவுமில்லாத சிபி சக்கரவர்த்தி எப்படி ரஜினி படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுந்திருக்கிறது.

Thalaivar 173: ரஜினி முடிவு சரியா?.. சிபி சக்ரவர்த்தி சரியா வருமா?.. ஒரு அலசல்…

கடந்த சில வருடங்களாகவே ரஜினி சீனியர் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதே இல்லை. ரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் என இளம் இயக்குனர்களுடன் பயணிக்க துவங்கி விட்டார். தற்போது அந்த லிஸ்ட்டில் சிபி சக்ரவர்த்தியும் சேர்ந்துள்ளார். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றார் போல் இளம் இயக்குனர்களுடன் கைகோர்ப்பதே சரி என ரஜினி நினைப்பது சரிதான் என்றாலும் அனுபவம் மிகவும் முக்கியம்.

சினிமாவில் ஹரி போன்ற பல இயக்குனர்கள் பல படங்களை இயக்கியும் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்க, ரஜினியோ ஒரே ஒரு படம் எடுத்த சிபி சக்கரவர்த்தியை டிக் அடித்திருக்கிறார். அவரின் முடிவு சரியா?.. ரஜினியை சிபி சக்கரவர்த்தி சரியாக ஹேண்டில் செய்வாரா? படம் ரசிகர்களை கவருமா? என்பதெல்லாம் படம் வெளியே வந்த பின்னரே தெரியவரும்.

From Around the web