வைரலாகும் ரஜினியின் 'தர்மன்' ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ!

 
Dharman making

கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு 'ஜெயிலர் 2', 'தர்மன்', 'KHxRK Reunion' படம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கிறது. 

இதில் 'தர்மன்' படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, 'உலக நாயகன்' கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினி டாக்டராக வலம் வரப்போகிறார். 

அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, ராஷி கண்ணா நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதன் ஷூட்டிங் இன்று (ஜூன் 25) முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று வெளியான இப்படத்தின் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது. தற்போது, இதனுடைய மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

From Around the web