அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி டாக்டராக நடிக்கும் 'தர்மன்'.. வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் 'ஜெயிலர் 2' ஷூட்டிங் முடிவடையப் போகிறது.
இதனையடுத்து நெல்சன் இயக்கத்திலேயே 'KHxRK Reunion' படத்திலும், 'உலக நாயகன்' கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் 'தலைவர் 173' படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இதில் 'தலைவர் 173' படத்தை முதலில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக இருந்து, பின் அவர் விலகி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கமிட்டானார். தற்போது, சிபிக்கு பதிலாக இந்த படத்தை 'டிராகன்' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலும், படத்துக்கு 'தர்மன்' என டைட்டில் வைத்துள்ளதாக குறிப்பிட்டு மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர். ரஜினி டாக்டர் லுக்கில் இருக்கும் இப்போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் ஷூட்டிங் இன்று (ஜூன் 24) முதல் பூஜையுடன் துவங்குகிறதாம். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தர்மமே வெல்லும்!#Dharman #Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav @kabilanchelliah @ShruthiManjari… pic.twitter.com/UWjXErKdIE
— Raaj Kamal Films International (@RKFI) June 24, 2026
