செம ஸ்டைலிஷ் லுக்கில் ரஜினி... வெளியானது 'தர்மன்' செகண்ட் லுக் போஸ்டர்!

 
Dharman 2nd look

Dharman : தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான 'தர்மன்' படப்பிடிப்பை இன்று (ஜூன் 25-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளனர்.

ரஜினி டாக்டர் ரோலில் நடிக்கும் இந்த படத்தை 'ஓ மை கடவுளே, டிராகன்' படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதில் முக்கிய வேடங்களில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை நடிகர் 'உலக நாயகன்' கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' மூலம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். 

இதற்கு அனிருத் இசையமைக்கிறார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று மாஸான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், தற்போது செம ஸ்டைலிஷ் லுக்கில் ரஜினி இருக்கும் செகண்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.


 

From Around the web