DC-யால் தர்மன் ரஜினியை காக்க வைத்த அனிருத்!
Jul 31, 2026, 18:27 IST
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இதை அஸ்வத் மாரிமுத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு ஆகியோர் தலைவருடன் இணைந்து நடிக்கிறார்கள். அடுத்த வாரத்தில் இருந்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கப்போகிறது.
இந்த ஷெட்யூலில் ஒரு பாடல் காட்சியை படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இது ஆல்ரெடி ஷூட் செய்திருக்க வேண்டிய பாடலாம்.
ஆனால், இதற்கு இசையமைக்கும் அனிருத் தான் பாடலை கொடுக்க லேட் பண்ணி விட்டாராம். காரணம் அவர் லோகேஷ் கனகராஜின் 'டிசி' (DC) படத்துக்கான பின்னணி இசையமைக்கும் பணியில் பிஸியாக இருந்தாராம்.
