Connect with us

Cinema News

மகள்களை பல வருடங்கள் மறைத்து வைத்த ரஜினிகாந்த்!.. மண்டோதரி முதல் ரஜினியை சீண்டிய ரகசியங்கள் வரை…

Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரை பேட்டி காண வந்த லதாவை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.

பின்னர் இருவரும் மனகசப்பால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதுப்போல இரண்டாம் மகளான செளந்தர்யா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறக்க இருவருக்கும் பிரச்னை உருவாகி விவகாரத்து ஆனது. அதை தொடர்ந்து விசாகன் என்பவரை செளந்தர்யா இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் புகைப்படம் பின்னணி இதானா? வித்தியாசமான காம்போவா இருக்கே…

ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவருமே தற்போது சினிமாவில் இயக்கம் முதல் தயாரிப்பு வரை பிஸியாக இருக்கின்றனர்.  ஐஸ்வர்யா இப்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த வார இறுதியில் படம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் கோச்சடையான், விஐபி 2 படங்களை இயக்கி இருந்த செளந்தர்யாவும் அடுத்த பட இயக்கத்தில் இறங்கி இருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டு மகள்களை ரஜினி பல வருடம் வெளியில் காட்டாமலே வைத்து இருந்தாராம். அவருக்கு பிறந்தது பெண்ணா? ஆணா என்பது கூட மீடியாவுக்கு பல ஆண்டுகள் தெரியாமல் தான் இருந்ததாம். ஒரு கட்டத்தில் மீடியாக்களே சேர்ந்து முதல் பெண்ணின் பெயர் மண்டோதரியாக இருக்கும் என எழுதினார்கள்.

அதுமட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளி பிள்ளையாக இருக்கும் போல அதான் ரஜினிகாந்த் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்து கொடுத்தார் எனவும் 80களில் ஒரு கிசுகிசு இருந்தது..

இதையும் படிங்க: எதே கீழ இருந்து புல்லட் வருமா?.. சலார் பில்டப்புக்கே சவால் விடுதே சைந்தவ்!.. சிரிப்பை அடக்க முடியல

அத்தனை கச்சிதமாக மகள்களை பாதுகாத்து வளர்த்து இருக்கிறார் ரஜினி. சின்ன பிள்ளையாக அவர்கள் இருந்த போது ஒரு புகைப்படம் கூட கசியவிடாமல் பார்த்து கொண்டு இருந்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top