Connect with us

Cinema News

குருநாதருக்காக ரஜினிகாந்த் செய்த விஷயம்… பழசை மறக்காம இருக்கதால தான் அவர் சூப்பர்ஸ்டார்..

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையை மாற்றியதில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு பெரிய பங்குண்டு. அப்படிப்பட்ட தன்னுடைய குரு கஷ்டத்தில் இருப்பதை தெரிந்துகொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய பிஸி ஷெட்யூலிலும் செய்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினிகாந்தை கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கே.பாலசந்தர். அவர் கொடுத்த படங்களால் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தினை ரஜினிகாந்தால் பெற முடிந்தது. தொடர்ச்சியாக அவருக்கு ஹிட் படங்களை உருவாக்கி தந்தார்.

இதையும் படிங்க: காபி குடிக்க அழைத்த ரசிகருக்கு விவேக் கொடுத்த சர்ப்பரைஸ்!.. மனுஷன் என்ன செஞ்சிருக்காரு பாருங்க!..

அப்படி ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராகி பிஸியாக நடித்து கொண்டிருந்த சமயம் கே.பாலசந்தர் பற்றி ஒரு தகவல் வருகிறது. அவருக்கு திடீரென ஏற்பட்ட கடன் பிரச்னையால் சொத்தை விற்க இருக்கிறார் என்றதை கேட்டவும் ரஜினிக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். உடனே தன்னுடைய கால்ஷூட்டை கே.பாலசந்தருக்கு கொடுக்கிறார்.

அந்த தேதிகளை வைத்து ஒரு படத்தினை தயாரித்தால் லாபம் எடுக்கலாம் என பாலசந்தர் முடிவெடுத்தாராம். மலையாளத்தில் ஹிட்டடித்த கதபறயும் போல் படத்தினை தமிழில் குசேலன் என்ற பெயரில் தயாரித்தனர். அந்த நேரத்தில் ரஜினியின் நடிப்பில் எந்திரன் படமும் உருவாகி வந்தது.

இதையும் படிங்க: ஈஸ்வரிக்கு எதிராக குழந்தை விஷயத்தில் முடிவெடுத்த ராதிகா… சிக்கிதவிக்க போகும் கோபி!…

இருந்தும் தன்னுடைய குருநாதரை காக்க ரஜினிகாந்த் குசேலன் படத்தில் நடித்தார். முக்கிய வேடத்தில் பசுபதி, மீனா நடிக்க படத்தின் வியாபாரம் பெரிய அளவில் நடந்ததாம். இருந்தும், ரஜினிக்கு சின்ன வேடம் என்பதால் குசேலன் தோல்வி படமாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top