Thalaivar 173: கதையை மாத்த சொன்ன ரஜினி!.. கடுப்பான சுந்தர்.சி?.. நடந்தது என்ன?...
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை சுந்தர்.சி இயக்கப் போகிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே வன்முறை காட்சிகளை கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ரஜினி. எனவே சுந்தர்.சி-யுடன் அவர் கூட்டணி அமைத்தால் கலகலப்பான காமெடி குடும்ப படம் உருவாகும், ரஜினியும் இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.
ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி நேற்று அறிவித்தார். இது தொடர்பான அறிக்கையை சுந்தர்.சி-யின் மனைவி குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விட்டு இரண்டு நிமிடங்களில் நீக்கியும் விட்டார். அந்த அறிக்கையை அவர் ஏன் நீக்கினார் என்பது தெரியவில்லை. சுந்தர்.சி-யிடம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதனால்தான் குஷ்பூ அந்த பதிவை நீக்கிவிட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். ஒருபக்கம் இந்த படத்திலிருந்து சுந்தர்.சி ஏன் விலக முடிவெடுத்தார் என்கிற விவாதங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. பலரும் பல வகையான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்..

சுந்தர் சி ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படங்களை இயக்குவார். அதாவது படத்தின் பட்ஜெட் என்னவோ அதை தயாரிப்பாளர் கொடுத்து விட வேண்டும். அந்த பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்துக் கொடுத்து விடுவார் சுந்தர்.சி. சொன்ன பட்ஜெட்டை விட குறைவான செலவில் படத்தை முடித்தால் சுந்தர்.சி-க்கு அதில் சில கோடிகள் கிடைக்கும். அதுபோக அவருக்கான சம்பளமும் கிடைக்கும். சுந்தர்.சி இதுவரை இப்படித்தான் படமெடுத்து வந்தார். அதேபோல் அவர் கமலிடமும் கேட்டிருக்கலாம். இதுவரை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எந்த படத்தையும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் செய்ததில்லை. இதுவே பிரச்சனையாக இருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள்
ஆனால் சிலரோ ‘சுந்தர்.சி கமலிடம் அப்படி கேட்டிருக்க மாட்டார். ஏனெனில் அவர் இப்போது வாங்குவதை விட டபுள் மடங்கு சம்பளத்தை பேசியிருக்கிறார்கள்’ என சொல்கிறார்கள். சிலரோ ‘துவக்கத்தில் இருந்தே சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பதில் ரஜினிக்கு ஒரு தயக்கம் இருந்தது. இதை ரஜினியே கமலிடம் சொன்னபோது ‘சுந்தர்.சி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பவர். குறைவான பட்ஜெட்டில் வேகமாக படத்தை எடுத்து கொடுத்துவிடுவார்.. சரியாக வரும்’ என்று கமல் சொன்னாலும் ரஜினி அரைகுறை மனதோடு சம்மதித்திருக்கிறார். தற்போது சுந்தர்.சி சொன்ன கதை தனக்கு பிடிக்கவில்லை என ரஜினி சொன்னதால் சுந்தர்.சி விலகிவிட்டார்’ என சிலர் சொல்கிறார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள ரிசார்ட்டில் இது தொடர்பான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சுந்தர்.சி ரஜினியிடம் முதலில் ஒரு கதை சொன்னார். அந்த கதை ரஜினிக்கு பிடிக்காததால் கதையை மாற்ற சொன்னார். எனவே சுந்தர்.சி வேறொரு கதையை தயார் செய்து அதை ரஜினியிடம் சொன்னார். ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் சுந்தர்.சியை அனுப்பி விட்டு ‘எனக்கு அவர் சொன்ன இரண்டு கதையும் பிடிக்கவில்லை’ என கமலிடம் ரஜினி சொல்ல, சுந்தர்.சியை தொடர்பு கொண்ட கமல் ‘வேறு ஏதாவது உங்களிடம் கதை இருக்கிறதா?’ என கேட்டிருக்கிறார். இதில் அப்செட் ஆகிதான் சுந்தர்.சி இந்த படத்திலிருந்து விலகி இருக்கிறார்’ என சிலர் சொல்கிறார்கள்.
ஏனெனில் கண்டிப்பாக கமல், ரஜினி இருவருமே கதையில் தலையிடுவார்கள். கமல் தயாரிப்பில் ரஜினி படம் என ஒப்புக்கொண்டு படம் துவங்கி, அதன்பின் கதையில் மாற்றம் செய்ய சொன்னால் அது சரியாக வராது என்று யோசித்த சுந்தர்.சி துவக்கத்திலேயே படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார்’ எனவும் சிலர் சொல்கிறார்கள்.
ஏனெனில் ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக வேறு காரணம் எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. சுந்தர்.சி சொன்ன கதைகள் ரஜினிக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதோடு சுந்தர் சி-க்கு முழு கதையை சொல்லும் பழக்கமே இல்லை. ஒரு வரியில்தான் கதை சொல்வார். எனவே ரஜினிக்கு பிடிக்கும் படி அவரால் கதை சொல்ல முடியாமல் போயிருக்கலாம்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்
