பஞ்சாயத்தே வேணாம்!. உதயநிதியை கழட்டிவிட்ட ரஜினி!.. தலைவர் 172-வில் நடந்தது இதுதான்..

 
பஞ்சாயத்தே வேணாம்!. உதயநிதியை கழட்டிவிட்ட ரஜினி!.. தலைவர் 172-வில் நடந்தது இதுதான்..
Thalaivar 172: ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு யாருடைய இயக்கத்தில் நடிக்கிறோம் என்பதை விட யாருடைய தயாரிப்பில் நடிக்கிறோம் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் சம்பளத்தை யார் கொடுக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல், இந்த தயாரிப்பாளர் படத்தில் நடித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்றால் மட்டுமே நடிப்பார்கள். விஜய் நடித்த கத்தி என்கிற படத்தின் மூலம்தான் லைக்கா நிறுவனம் உள்ளே வந்தது. அது ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என சொல்லி தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, சீமான் போன்ற பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களும் நடந்தது. அதன்பின் கத்தி பட போஸ்டரில் லைக்கா என்கிற பெயர் நீக்கப்பட்டது. அதன்பின்னர்தான் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையும் படிங்க: அஜித் செய்த வேலை!.. கடுப்பான பிரேமலதா!. வராம போனதுக்கு இதுதான் காரணமாம்!.. நடிகர் ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இது அவரின் 170வது திரைப்படம். இப்படம் முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். பஞ்சாயத்தே வேணாம்!. உதயநிதியை கழட்டிவிட்ட ரஜினி!.. தலைவர் 172-வில் நடந்தது இதுதான்.. லோகேஷுக்கு பின் அதாவது ரஜினியின் 172வது திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இப்படத்தை மாஸ்டர், லியோ ஆகிய படங்களை தயாரித்த ஸ்டுயோ கிரீன் நிறுவனர் லலித்குமார் தயாரிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. இதையும் படிங்க: பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!. உண்மையில் ரஜினியின் 172வது படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் தயாரிக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மாரி செல்வராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளனர். ஆனால், ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் நடித்தால் தன்னை திமுக கட்சிக்கு ஆதரவாளர் என்பது போல முத்திரை குத்தி சமூகவலைத்தளங்களில் விமர்சிப்பார்கள். எதற்கு தேவையில்லாத பஞ்சாயத்து என நினைத்த ரஜினி லலித்குமாருக்கு ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. ரஜினி போன்ற பெரிய நடிகரே இதுபோன்ற விஷயங்களுக்கு பயப்படும்படி ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இதையும் படிங்க: ரஜினியின் பொன்விழா ஆண்டில் மகுடம் சூட்டப்போகும் லோகேஷ்! நடத்தப் போறது யார் தெரியுமா?

From Around the web