Categories: Cinema News latest news

நன்றி கெட்ட ரஞ்சித்!.. ஏத்தி விட்டதுக்கு ரஜினிகாந்தை நல்லா செஞ்சிட்டாரு!.. கொதிக்கும் ரசிகர்கள்!..

ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை காப்பியடித்து மெட்ராஸ் படத்தை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு கபாலி மற்றும் காலா பட வாய்ப்புகளை சூப்பர் ஸ்டார் கொடுத்து ரொம்பவே தப்பு பண்ணிவிட்டார் என்றும் அட்டகத்தி ரஞ்சித்தை கபாலி ரஞ்சித்தாக தூக்கி உயரத்தில் ரஜினிகாந்த் வைத்த நிலையில், அவரை இப்படி அசிங்கப்படுத்தி விட்டாரே பா. ரஞ்சித் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

#நன்றிகெட்ட_ரஞ்சித் ஹாஷ்டேக்கை பதிவிட்டு சோஷியல் மீடியாவில் பா. ரஞ்சித்துக்கு எதிரான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் ரசிகர்களுடன் மோதிய ரஜினிகாந்த் ரசிகர்கள் லியோ படத்தை எந்தளவுக்கு கண்டமாக்க முடியுமோ அந்த அளவுக்கு சம்பவம் செய்து விட்டனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சியை விட்டுத்தள்ளுங்க.. குட் பேட் அக்லி சூப்பர் அப்டேட் தெரியுமா?.. பாலிவுட்டே இறங்குது!..

இந்நிலையில், பா. ரஞ்சித் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் சிக்கியிருக்கும் நிலையில், என்ன என்ன சொல்லி சமாளிக்கப் போறாரோ என தெரியவில்லை. அயோத்தி கோயிலுக்கு ரஜினிகாந்த் போகும் போதே ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதில் எனக்கு விமர்சனம் இருக்கிறது என பா. ரஞ்சித் சொல்லியிருந்தார்.

விஜய்யின் கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபுவின் சீடன் தான் பா. ரஞ்சித். கோவா படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த நிலையில், உதவி இயக்குநராக ரஞ்சித் செளந்தர்யாவுடன் நட்பாக பழக ஆரம்பித்தார். அதன் வழியாக அவருக்கு கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: நண்பர் ராஜ்பகதூர் செய்த மாற்றம்… ரஜினியை நடிகனாக்கிய அந்த ஸ்பெஷல் நிகழ்வு…

கபாலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக ஓடியது. ஆனால், காலா படம் பெரிய சொதப்பலை சந்தித்தது. அதன் பின்னர் ரஞ்சித் படங்களில் நடிப்பதை ரஜினிகாந்த் தவிர்த்து விட்டார். ஆனால், எந்த சினிமா மேடையிலும் ரஞ்சித்தை விட்டுக் கொடுத்து ரஜினிகாந்த் பேசியதில்லை.

ரஜினிகாந்தை வைத்தே கபாலி, காலா என தலீத் அரசியல் படங்களை எடுத்தது அவருக்கு தெரியுமா? என கேட்டு ஒருவர் சிரிக்க, அதற்கு ரஞ்சித் நக்கலாக சிரித்து தெரியாது என்பது போல கொடுக்கும் ரியாக்‌ஷன் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை காண்டாக்கி உள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் தங்கலான் திரைப்படம் ரஜினி ரசிகர்கள் கையில் சிக்கி என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கப்போவது இவர்தானாம்!.. செம காம்போவா இருக்குமே!…

Saranya M
Published by
Saranya M