
Cinema News
ரஜினியை பதறவிட்ட கேப்டன் விஜயகாந்த்!.. பாத்ததும் பயந்துட்டாரு!.. நடிகர் சொன்ன தகவல்…
Published on
By
விஜயகாந்த் சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜ வாழ்விலும். அல்லது நிஜவாழ்வில் எப்படி இருப்பாரோ அப்படித்தான் அவர் சினிமாவிலும் தன்னை காட்டிக்கொண்டார். தான் நடிக்கும் படங்களில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அவரின் மனதின் ஆழத்தில் இருந்து வருபவைதான்.
போலீஸ் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் எப்படி களத்தில் இறங்க வேண்டும்.. அரசியல்வாதிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் பல திரைப்படங்களிலும் நடித்து காட்டியிருக்கிறார் விஜயகாந்த். அதனால்தான் பல போலீஸ் அதிகாரிகளுக்கும் அவரை பிடித்துப்போனது. நிறைய காவல்துறை அதிகாரிகள் விஜயகாந்தின் ரசிகர்களாக இருந்தார்கள்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்!.. அட இவரும் கேப்டன் ரசிகன் போல!..
விஜயகாந்தை பொறுத்தவரை தனக்கு தவறென தெரிந்துவிட்டால் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அதை எதிர்த்து நிற்பார். உதவி கேட்டு யார் வந்தாலும் அவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்வார். திரையுலகில் அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறார்.
நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது நடிகர், நடிகைகளை திரட்டி மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தி அந்த கடனை அடைத்ததோடு 2 கோடி இருப்பும் வைத்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது.
இதையும் படிங்க: என்னது விஜயகாந்த் உதவி செய்யலயா? நம்புற மாதிரி சொல்லுங்க – அஜித் வராததற்கு இதுதான் காரணமா
சிம்பு போன்ற வயதில் குறைந்த நடிகர்களிடம் அவரே தொலைப்பேசியில் பேசி கலந்து கொள்ள வைத்தார். ரஜினி, கமல் ஆகியோரை அவரே நேரில் சென்று அழைத்தார். இதுபற்றி ஒரு மேடையில் பேசிய நடிகர் டெல்லி கணேஷ் ‘பாபா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள சிவாஜி கார்டனில் நடந்தது. அங்கு ரஜினியுடன் நான் அமர்ந்திருந்தேன். அப்போது நிறைய வெள்ளை நிற அம்பாசிடர் கார்களில் பலரும் வந்து இறங்கினார்கள். அவர்களை பார்த்ததும் ரஜினி மிரண்டுவிட்டார். யார் யார்?. இங்கே எதுக்கு வறாங்க?’ என பதறினார்.
அருகில் வந்ததும் அது விஜயகாந்த் என்பது அவருக்கு தெரிந்துவிட்டது. ‘வாங்க’ என வணக்கம் வைத்தார். அருகில் வந்த விஜயகாந்த் ‘மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு நீங்க வரணும். கமல் வரன்னு சொல்லிட்டார்’ என சொல்ல ரஜினி ‘வரேன். வரேன். வரேன்’ என சொன்னார். நீங்க வரணும்னு விஜயகாந்த் ஒருமுறைதான் சொன்னார். ரஜினியோ வருகிறேன் என பலமுறை சொன்னார்’ என டெல்லி கணேஷ் கூறினார்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...