ஜெயிலர் 2 படத்தில் நடனமாடிய ரஜினிகாந்த்!.. வெட்டி தூக்கிய நெல்சன்!..

 
jailer2

ரஜினிக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 என்கிற பெயரில் உருவானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்க, நெல்சன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது.  படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினி சண்டை போடவில்லை, நடனமாடவில்லை.. எல்லாமே அவரின் ஆட்கள்தான் செய்கிறார்கள். இந்நிலையில்தான், இந்த படத்தில் நடித்துள்ள ஜாபர் சாதிக் ஒரு முக்கிய தகவலை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். ஜெயிலர் முதல் பாகத்தில் தமன்னா ஆடியா காவாலா பாடலில் ரஜினியுடன் இணைந்து ஜாபர் சாதிக்கும் நடமாடியிருந்தார்.

jaffer

பேட்டியில் கூறிய சாதிக் ‘ஜெயிலர் பாடல் படப்பிடிப்பின் போது கடைசி நாளில் ஆலபோலேலோ பாடல் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்த போது நான் அங்கே போனேன். அப்போது ரஜினி சார் அந்த பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தார். ஆனால், அது எடிட்டிங்கில் நெல்சன் தூக்கிவிட்டார். 200 முதல் 300 பெண்களுக்கு நடுவில் அவர் ஆடும் நடனம் மிகவும் க்யூட்டாக இருக்கும். அந்த நடன ஸ்டெப்பை என்னால் இப்போது வெளியிட முடியாது. ஒருவேளை அதை நீக்கப்பட்ட காட்சியாக வெளியிடலாம் என நினைக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

Tags

From Around the web