Rajinikanth: ரஜினிக்கு உயரிய விருது!... மேலும் ஒரு மகுடம்!.. பரபர அப்டேட்!....
பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்து நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் படித்து இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவரின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என்கிற உச்சத்தை தொட்டவர்தான் நடிகர் ரஜினிகாந்த்.
எந்த நடிகரையும் பின்பற்றாமல் தனக்கென தனி ஸ்டைல், உடல் மொழி ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் ரஜினி. இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த நடிகராக ரஜினி மாறினார்.கடந்த 50 வருடங்களாக ரஜினி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் 50 வருடங்களாக ஒரு நடிகர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது ஆச்சர்யமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
அதிலும் இப்போதும் விஜய், அஜித் போன்ற இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார் நடிகர் ரஜினி. இப்போதும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இவரிடம்தான் இருக்கிறது. சில தோல்விப்படங்களை கொடுத்தாலும் மீண்டும் உழைத்து ஜெயிலர் போன்ற 600 கோடிக்கும் மேல் வசூலிக்கும் படத்தை கொடுப்பதுதான் ரஜினியின் ஸ்டைல்.
ரஜினி தனது திரை வாழ்வில் பல விருதுகளை பெற்றிருக்கிறார். குறிப்பாக பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை மத்திய அரசு இவருக்கு கொடுத்து கவுரவித்தது. மேலும் தாதா சாகிப் பால்கே விருதையும் வாங்கினார் ரஜினி. மேலும், கலைமாமணி போன்ற விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார், இதுபோக சிறந்த நடிகருக்கான பல மாநில அரசு விருதுகளையும் ரஜினி வாங்கியிருக்கிறார்.
இந்நிலையில் கோவாவில் நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா 2025 விழாவில் 2025ம் வருடத்திற்கான உயரிய விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.இந்த தகவலை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
