Connect with us
rajini

Cinema News

நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. அந்த விஷயத்தில் மாஸ் காட்டும் ரஜினி

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அந்த காலகட்டத்தில் ஹீரோ என்றால் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் நல்ல உயரம் தெளிவான தமிழ் உச்சரிப்பு இவை அனைத்தும் ஒரு ஹீரோவிற்கான அடையாளமாக இருந்தது. ஆனால் இதற்கு அப்படி எதிர்மறையாக கருப்பு நிறம் கன்னடம் கலந்த தமிழ் உச்சரிப்பு அதுவும் கடகடவென டயலாக் பேசுவது என்பது ரஜினியின் அடையாளமாக இருந்தது.

ஒரு ஹீரோவிற்கான ஃபார்முலாவை முற்றிலுமாக உடைத்து மக்களின் நாயகனாக திரையில் அடித்து தூள் கிளப்பினார். மக்களும் நம்மில் இருந்து ஒருவன் அங்கு கலக்குகிறான்டா என கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனால் எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். சமகாலங்களில் கமல்ஹாசன் ஒரு ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும் மக்கள் ரஜினி திரையில் செய்யும் ஸ்டைலுக்கும் பஞ்ச் வசனத்திற்கும் இவரை தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.

ரசிகர்களின் பல்சை பக்காவாக பிடித்த ரஜினி அதிலிருந்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கி தமிழ் மக்களை தன் வசம் கட்டிப்போட்டார். ரஜினியைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரைப் பற்றி தயாரிப்பாளரோ இயக்குனரோ இதுவரை எந்தவித புகார்களையும் அளித்ததில்லை.

இதுவே அவரின் வெற்றிக்கு மூலக்காரணம். தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு நடிகர் 75 வயது வரை ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் பொழுது பின்பற்றக்கூடிய முக்கியமான நல்ல பழக்கங்களில் ஒன்று அவர் படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வருவதுதான். சொன்ன நேரத்திற்கு வருவது ரஜினியின் வழக்கம். அதை ரஜினி தற்போது நடித்து முடித்துள்ள கூலி படம் வரை கடைப்பிடித்து வருகிறார்.

கூலி படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இளசுகளிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. லியோவில் தவற விட்டதை இந்த முறை கூலி படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் பிடிப்பார் என்று ட்ரெய்லர் பார்த்ததிலிருந்து தெரிகிறது.

இந்த முறை இவரது ரைட்டிங் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கான ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு ப்ரீ புக்கிங் ரெக்கார்டுகளை உடைத்து சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்துடன் கிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக உள்ள வார்-2 திரைப்படத்தின் புக்கிங் இதில் பாதி அளவு கூட தரவில்லை. 75 வயதிலும் இளம் ஹீரோகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் மற்றும் அஜித்துக்கு இன்றும் தண்ணி காட்டி வருகிறார் ரஜினி. ரஜினி நடித்த தனது முதல் படமான அபூர்வ ராகங்கள் நடித்த போது விஜய்க்கு வயது ஒன்று அஜித்துக்கு வயது 4. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக உச்சம் தொட்டுள்ளனர். இருந்தாலும் உலக அளவில் புகழ்பெற்று நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ரஜினி தான். இந்த அசுர வளர்ச்சி சினிமா உலகமே வியந்து பார்க்கிறது.

Continue Reading

More in Cinema News

To Top