ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்த ஜெயிலர் 2வின் Ala Bolelo பாடல்!

 
Jailer 2

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் ஓவர் ஆனது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் தான் இயக்கி வருகிறார்.

'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசை. தற்போது, இதன் முதல் சிங்கிள் ட்ராக் 'Ala Bolelo'-வை ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்பாடலில் நடிகை பூர்ணா தான் நடனமாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கும் இந்த பாடலை அனிருத்துடன் சேர்ந்து தீப்தி சுரேஷ் பாடியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web