ஜெயிலர் 2 முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

 
Jailer 2

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சன் காம்பினேஷனில் உருவாகும் ரெண்டாவது படம் 'ஜெயிலர் 2'. இதன் முதல் பாகம் பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

'ஜெயிலர் 2'-வுக்கு ரஜினி படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தான் இசை. 

பார்ட் 1-ஐ போல் இதிலும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி. ஆல்ரெடி இதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ரெஸ்ட் இல்லாமல் இரவும் பகலுமாக நடந்து வருகிறது. படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இன்று இதன் முதல் சிங்கிள் ட்ராக்கை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

From Around the web