அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸாகும் ரஜினியின் 'ஜெயிலர் 2'... மாஸான ப்ரோமோவை வெளியிட்ட 'சன் பிக்சர்ஸ்'!

 
Rajinikanth jailer 2

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்' என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் 'ஜெயிலர் 2' படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது.

ஃபர்ஸ்ட் பார்ட் வேற லெவல் ஹிட் என்பதால், இதன் முதல் அறிவிப்பு வீடியோ வந்தபோதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடி விட்டது. முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இதையும் இயக்குகிறார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் ரஜினிக்கு உதவி செய்வது போல் வலம் வரப்போகிறார்கள்.

'சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இந்த படத்தை வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி திரைக்கு கொண்டு வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளனர்.

From Around the web