Connect with us

Cinema News

தட்டிவிட காரணம் சொன்ன தயாரிப்பாளர்… மகேந்திரனுக்காக ரஜினி செய்த தியாகம்… நீங்க வேற லெவல் சாரே!

Rajinikanth: இயக்குனர் மீது இருந்த நம்பிக்கையால் கால்ஷூட்டை கூட கவலைபடாமல் நான் இருக்கேன். நீங்கள் நினைத்த மாதிரி கிளைமேக்ஸை எடுங்கள். அதுவரை நான் இந்த படத்தில் தான் இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜானி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு அபாரமாக பேசப்பட்டது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..

இன்னும் ரஜினி, ஸ்ரீதேவியின் கால்ஷூட் ஒரு நாள் தான் இருக்கிறது. ஒரு மாதம் முன்னரே, மழை அடிக்க வேண்டும். ஸ்ரீதேவி பாடும் பாடல் காட்சியில் நூறு குடைகளும், இருநூறு துணை நடிகர்களும் தேவை என்று தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தாராம் மகேந்திரன். 

அந்த படத்தின் சில காட்சிகளை சென்னையில் ஒரு பகுதியில் எடுத்துவிட்டு பாடல் காட்சி எடுக்க மாலையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு படக்குழு வருகிறது. அங்கு கேட்ட குடையும் இல்லை. நடிகர்களும் இல்லை. மழைத் தண்ணீருக்காக வரவழைக்கப்பட்டிருந்த தீயணைப்பு படை வண்டி மட்டுமே நிற்கிறது.

என்ன ஆனது என மகேந்திரன் கேட்க தயாரிப்பாளர் மழுப்பி கொண்டே இருந்தாராம். இதனால் இயக்குனர் சோர்ந்து போய் உட்கார ரஜினி வந்து என்ன காரணம் எனக் கேட்டாராம். அவர் விஷயத்தினை சொன்னதும், தயாரிப்பாளரிடம் ஓடி கிளைமேக்ஸை மகேந்திரன் நினைத்த மாதிரி எடுத்து கொடுங்கள் என்றாராம். இன்னும் உங்க கால்ஷூட் ஒரு நாள் தானே இருக்கு என தயாரிப்பாளர் மீண்டும் இழுத்தாராம்.

இதையும் படிங்க: அதிதி ராவ் எத்தனை நாள் அலையவிட்டார்… மேடையில் ஓபனாக சொன்ன சித்தார்த்…

Continue Reading

More in Cinema News

To Top