அனிருத் திருமணம் ஓவர்!.. பேரன்களுடன் ஜாலி பண்ணும் சூப்பர் ஸ்டார் ரஜினி!..
ஜெயிலர் 2 வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்ரீஸ் நாட்டில் நடந்த அனிருத் திருமணத்தில் பங்கேற்று வந்த நிலையில் தற்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பேரன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து எதிர்ப்பாராத வெற்றியை பெற்றுள்ளது.அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் தர்மன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் நயன்தாராவும், சிம்ரன், ரஷிகன்னா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ரஜினிகந்தை விட அவரது பேரன்கள் இருவரும் உயரமாக வளர்ந்து இருக்கும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. திரையில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார், குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் இந்த அழகான தருணங்களும் ரசிகர்களிடையே கவனம் பெற்ரு வருகிறது.
