
Cinema News
பீடி கேட்ட ரஜினிக்கு கிளாஸ் எடுத்த தோட்டக்காரார்!.. அதிலிருந்து சூப்பர்ஸ்டார் கத்துக்கிட்டது இதுதானாம்!…
Published on
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். ஒரு மனிதன் சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதைபோல் ரஜினியும் தனது விடாமுயற்சியினால் இந்த அளவு பெரும்புகழை பெற்றுள்ளார் என்றால் அதற்கு அவரது விடாமுயற்சிதான் காரணம்.
இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்தில் இவருக்கு கதாநாயகனாகும் வாய்ப்பு அமையவில்லை. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் குறைந்த சம்பளத்திற்கே நடித்துள்ளார். பின் மனம் தளராத ரஜினி தனது விடாமுயற்சியினால் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார்.
இதையும் வாசிங்க:சாவித்ரியிடம் போட்டி போட்ட சரோஜா தேவி… கன்னட பைங்கிளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் திலகம்…
இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம்தான் ஜெயிலர். இப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னிலை வகித்தது. ரஜினி நடித்தாலே அப்படம் வெற்றி பெறும் எனும் அளவிற்கு இவர் சினிமாவில் வளர்ந்துள்ளார்.
என்னதான் இவர் சினிமாவில் இவ்வளவு உயரத்தை எட்டியிருந்தாலும் தான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமே இவருக்கு வாழ்வில் ஒரு பாடத்தை புகட்டியுள்ளது. பைரவி திரைப்படம்தான் இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம். இப்படத்தின் படபிடிப்புக்கு ரஜினி சென்றுள்ளார். அனைவரும் வருவதற்கு முன்னரே இவர் சென்றுவிட்டாராம். ரஜினிக்கு சிகெரெட் பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதையும் வாசிங்க:மேஜர் சுந்தர்ராஜன் கேட்ட உதவி!.. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட எம்ஜிஆர்.. பழச மறக்காத மக்கள் திலகம்
அப்போது அங்கு ஒரு தோட்டக்காரர் புல் அறுத்து கொண்டிருந்தாராம். அப்போது ரஜினி அவர் பக்கத்தில் சென்று ‘ வணக்கம்ங்க’ என கூறியுள்ளார். தோட்டகாரரோ வணக்கம் என கூறிவிட்டு அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தாராம். பின் அவரிடம் ‘பீடி கிடைக்குமா?’ என கேட்டுள்ளார் ரஜினிகாந்த். ஆனால் தோட்டகாரரோ அதெல்லாம் இல்லை என கூறிவிட்டாராம். ஆனால் அவரது காதில் பீடி இருந்துள்ளது. அப்போது ரஜினி உங்கள் காதில் இருக்கிறதே என கூற நான் அதை உனக்கு கொடுத்துவிட்டால் நான் போய் யாரிடம் எனக்கு கேட்க என கூறி தர மறுத்துவிட்டாராம்.
ரஜினி உடனே அவரிடம் நான் சினிமா நடிகர் என கூறியுள்ளார். அதற்கு தோட்டகாரரோ நான் சினிமா பார்ப்பதில்லை.. நீங்க நடிகரா அல்லது யாருனுலாம் தெரியாது. ஆனால் என்னிடம் பீடி இல்லை என கூறிவிட்டாராம். அப்போது அந்த விஷயம் ரஜினிக்கு ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது. சினிமா என்று ஒன்று இல்லையென்றால் நாம் சாதாரண மனிதன் தான். அதனால் வீண் பகட்டு எல்லாம் ஆகாது என புரிந்து கொண்டாராம் சூப்பர் ஸ்டார்.
இதையும் வாசிங்க:அடுத்த ஆண்டு ஆண்டவர் ஆண்டு தான் போல.. இந்தியன் 2, இந்தியன் 3 எப்போ ரிலீஸ் தெரியுமா?
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...