Categories: Cinema News latest news

ரஜினி கேரியரில் தண்ணி போட்டு நடிச்ச பாடல் இத்தனையா.. இதில் நாலாவது பாட்ட இவர் எழுதினாரா?

Rajinikanth: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தான் இதுவரை காட்டி இருக்கிறார். அவர் நடிப்பில் வந்த படங்களின் கதையை விட அவர் ஸ்டைலை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கும். அதுவே படத்தினை ப்ளாக்பஸ்டர் ஹிட்டும் ஆக்கிவிடும்.

இந்த முறை காலம் காலமாகவே தொடர்ந்து வருகிறது. ரஜினிகாந்த் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சமயம் கமல் உச்சத்தில் இருந்தார். இருவரும் நேரெதிரான லுக்கை உடையவர்கள். ரஜினி நிறமே பலரை வாய் பிளக்க வைத்தது. அதனாலே ஸ்டைலை வளர்த்து கொண்டார்.

இதையும் படிங்க: முன்ன பின்னன்னு சும்மா சுண்டி இழுக்குறாரே!.. மாளவிகான்னாலே தாராள மனசு தான் போல!..

சில இடங்களில் சில விஷயம் தேவை என்றால் அதை அச்சு பிசிறாமல் செய்து கொடுத்துவிடுவார். நிஜத்திலேயே குடிப்பழக்கம் இருக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்புக்காக இதுவரை அதை செய்தது இல்லை என்றே கூறப்படுகிறது. 

இருந்தும் அவர் குடித்த மாதிரி நடித்த பாடல்களுக்கு சினிமா உலகில் அதிக மவுஸ் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் ரஜினிக்கு பிடித்த நான்கு பாடல்களின் லிஸ்ட்டை ஒருமுறை பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜுக்கு சொல்லி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: அத்தனை பிரபலங்களும் பாராட்டுறாங்க!.. ஆனாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் இவ்ளோ தானா?..

அவர் சொன்ன லிஸ்ட்டில் முதல் இடத்தில் ஊர தெரிஞ்சிக்கிட்டேன் கண்மணி பாடல். ஓ கிக்கு ஏறுதே, ராம ஆண்டாலும் பாடலுக்கு பின்னர் என் தங்க சிலை பாடல் எனக் கூறினாராம். இந்த பாடல் பா ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் இடம் பெற்று இருந்தது. 

இந்த பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ் என்பதால் தன்னுடைய பாடல் அந்த லிஸ்ட்டில் வந்து விட்டதால் சந்தோஷப்பட்டதாக குறிப்பிட்டார். நான்கு பாடல்களுமே இன்று வரை சினிமாவில் ட்ரெண்ட் லிஸ்ட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily