Categories: Cinema News latest news

மனசிலாயோ பாடலை ரியலாக பாடியது இந்த பிரபலம் தானா? ரஜினியின் ஆசையால் நடந்த மேஜிக்

Manasilaayo: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அப்படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடல் குறித்த சில ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ராணா டகுபதி, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், அமிதாப்  பச்சன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்

இப்படமும் ஜெயிலர் போல மல்ட்டி ஸ்டார் படமாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல் என்கவுண்டர் சம்மந்தப்பட்ட போலீஸ் கதையாகவே இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளதாம். கண்டிப்பாக இது ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்டாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படம் அக்டோபர் 10ந் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் கடைசி கட்ட பணிகளை முடித்துவிட்டு இதுகுறித்த அறிவிப்புகள் வரும் எனவும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மனசிலாயோ சிங்கிள் நேற்று வெளியிடப்பட்டது. மலையாளம் கலந்து பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது. இப்பாடலில் மஞ்சு வாரியர், ரஜினிகாந்த், ரக்‌ஷன், ஸ்பெஷல் கேமியோவில் அனிருத் என சர்ப்ரைஸாக ஆடி இருந்தனர்.

இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!

இப்பாடலை  ஏஐ மூலம் மறைந்த மலேசியா வாசுதேவனை பாட வைத்துள்ளனர். முதலில் மலேசியா வாசுதேவன் பாடினால் நன்றாக இருக்கும் என்பதை ரஜினிகாந்த் தான் பரிந்துரைத்து இருக்கிறார். முடியுமா என ரஜினி கேட்க அனிருத்தும் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

yugendran

பொதுவாக ஏஐ பாடல்களுக்கு பாடகர் ஒருவர் பாடியே அதை வேறொரு குரலுக்கு மாற்றுவார்கள். இந்த ஐடியாவில் மலேசியா வாசுதேவன் குடும்பத்தினர் இடம் அவரின் குரல் குறித்த சாம்பிள்களை கேட்க யுகேந்திரன் அப்பாவின் குரலில் இளையராஜா கச்சேரியில் நான் தான் பாடிக் கொண்டிருக்கிறேன். நானே பாடட்டுமா என கேட்க உடனே பட குழு அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னரே இப்பாடல் உருவானதாம்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily