SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் ரஜினி?!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!...
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் ராஜமௌலியை இந்தியாவின் முக்கிய இயக்குனராக மாற்றியது. தெலுங்கில் ஏற்கனவே இவர் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கவனிக்க வைத்தது. பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், தமன்னா, ராணா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதிலும் பாகுபலி 2 திரைப்படம் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
அதன்பின் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து RRR என்கிற படத்தை இயக்கினார் ராஜமவுலி. அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்ததோடு, அந்த படத்தில் வந்த ஒரு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.
இந்த படத்திற்கு வாரணாசி என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற 15ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் என ஏற்கனவே செய்தி வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட ஒரு கெஸ்ட் ரோல் இந்த படத்தில் இருக்கிறதாம். அதைப்பற்றி கேட்டறிந்த ரஜினி அதில் நடிக்க ஆர்வம் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினி இதில் நடிப்பாரா இல்லையா என்பது போகப் போக தெரியவரும்.
