ரஜினிகாந்தை சந்தித்த வெற்றிப்பட இயக்குனர்.. காரணம் நீங்க நினைக்கிறது இல்ல... அதுக்கும் மேல

அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்தில் நாயகர்களாக துல்கர் சல்மான், ரக்ஷன் அவர்களுக்கு ஜோடியாக ரிது வர்மா, நிரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த வருடம் வெளியான இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. அப்பொழுதே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பாராட்டிய ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்த ஆடியோவில் கூட ரஜினிகாந்த் தனக்காக முடிந்தால் ஒரு கதை தயார் செய்யும்படி கேட்டிருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தை தேசிங் பெரியசாமி போயஸ் கார்டனில் சந்தித்தார். ஒருவேளை கதை சொல்லி இருக்கிறார் போல் எனத் தகவல்கள் வெளியாகியது. ஆனால், விரைவில் தேசிங்குவிற்கும் நடிகை நிரஞ்சனிக்கும் விரைவில் திருமணமாக இருக்கிறது. அதனால், தனது திருமணப் பத்திரிக்கையை வைக்க தான் இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்கும் என நம்பப்படுகிறது.
#Rajinikanth | நடிகர் ரஜினிகாந்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி போயஸ் கார்டனில் சந்தித்தார்.
— Ponmanaselvan S (@IamSellvah) February 13, 2021
படம் வெளியான நேரத்தில் பாராட்டிய ரஜினி, தனக்காக ஒரு கதையை உருவாக்கும்படி அவரிடம் தெரிவித்திருந்தார். pic.twitter.com/iy4PNczaQt