Connect with us

Cinema News

கணவர் இல்லாமல் தனியாக வந்த நயன்தாரா!.. கலைஞர் 100 விழாவுக்கு யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா?

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராத நடிகை நயன்தாரா இன்று கருப்பு நிற சேலையை அணிந்துக் கொண்டு கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள தனியாக காரில் ஏறி வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எப்போதுமே நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் தான் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில், எல்ஐசி படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் பிசியாக இருக்கும் நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகை நயன்தாரா மட்டும் தனியாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு புடிச்ச விஷயம்!.. இப்படி விக்னேஷ் சிவனுக்கு எல்லாமே வினையா முடியுதே.. ஏன்?

கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலர் என்பது போல கருப்பு நிற சேலையில் செம க்யூட்டாக நயன்தாரா வந்ததை பார்த்த ரசிகர்கள் வேறு யாரெல்லாம் பிரபலங்கள் வந்திருக்கின்றனர் என்பதையும் உற்று நோக்கி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து காரில் ஜம்முன்னு கிளம்பும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு அவரது நினைவிடத்திற்கு சென்று கூட அஞ்சலி செலுத்தாத நிலையில், கலைஞர் 100 விழாவுக்கு வடிவேலு வந்திருப்பதை பார்த்து அங்குள்ள ரசிகர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: வயசு பசங்க நிலைமை ரொம்ப பாவம்!.. மொத்த அழகையும் பனியனில் காட்டும் தர்ஷா குப்தா..

நடிகர் விஜய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அஜித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறுகின்றனர். அவர் தனது குடும்பத்தை மட்டுமே சென்னைக்கு அனுப்பி விட்டு அவர் அப்படியே துபாயில் இருந்து அஜர்பைஜானுக்கு விடாமுயற்சி படப்பிடிப்புக்காக சென்று விட்டார் என்கின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top