Rajini: பிறந்தநாளில் ஹிட் படத்தை இறக்கும் சூப்பர்ஸ்டார்!.. பக்கா மாஸ்!..
இந்திய சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினி. 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் வெளியான 95 சதவீத படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள்தான்.
தற்போது 74 வயதான நிலையிலும் ஆக்டிவாக சினிமாவில் நடித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஒருபக்கம் நெல்சன், கார்த்திக் சுப்பாராஜ், லோகேஷ் கனகராஜ் என இளம் இயக்குனர்களுடன் கூட்டணி போடுகிறார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அடுத்து அவர் நடிக்கவுள்ள அவரின் 173-வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த பட அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான வருகிற டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.

ஒருபக்கம் ரஜினியின் பிறந்தநாளன்று அவரின் நடிப்பில் 1999ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். ஏற்கனவே இந்த படத்தை புதிய தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுவுடன் வெளியிட தயாராக வைத்திருக்கிறார்கள். எனவே, படையப்பா ரசிகர்களுக்கு டிசம்பர் 12 விருந்தாக அமையப்போகிறது.
