Rajinikanth: ராகவேந்திரா திருமண மண்டபத்தை இடிக்கும் ரஜினி!. வேற பிளான் இருக்கு!..

 
rajinikanth


1989ம் வருடம் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் ராகவேந்திரா திருமண மண்டபத்தை கட்டினார். இந்த மண்டபத்தை கலைஞர் கருணாநிதி திறந்துவைத்தார்.

தனது ரசிகர்களையும் ரஜினிகாந்த் அவ்வப்போது அங்குதான் சந்திப்பார். ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை கூட்டம் நடத்துவது என எல்லாமே இங்குதான். ராகவேந்திரா திருமண மண்டபம் என்பது கிட்டத்தட்ட ரஜினியின் அலுவலகம் போலவே செயல்பட்டு வந்தது. 2001ம் வருடம் ‘நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி.. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது கட்சியும் போட்டியிடும்’ என ரசிகரக்ள் மத்தியில் ரஜினி அறிவித்தது கூட இந்த மண்டபத்தில்தான்.

பெரும்பாலான நேரங்களில் ரஜினி அங்குதான் இருப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் அந்த மண்டபத்தில் எந்த திருமணமும் நடைபெறவில்லை. அதேபோல், எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான்,  இந்த மண்டபம் தொடர்பாக ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. ராகவேந்திரா திருமண மண்டபத்தை இடித்துவிட்டு அங்கே ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டும் ஐடியா ரஜினிக்கு வந்திருக்கிறதாம். அநேகமாக ஆடி மாதம் முடிந்தபின் அதற்கான வேலைகள் துவங்கும் என சொல்லப்படுகிறது.

Tags

From Around the web