×

ரஜினி அரசியல்... லதா ரஜினிகாந்த் கட்சி! மக்கள் மன்றத்தின் ஐடியாதான் என்ன?

ரஜினி இந்தத் தேர்தலுக்கு 100 சதவீதம் அரசியலுக்கு வரமாட்டார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார். 
 
 

கட்சி தொடங்குவதாக முதலில் அறிவித்த ரஜினி, பின்னர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜூனமூர்த்தி, தனியாகக் கட்சி தொடங்க இருக்கிறார். அதேபோல், மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழருவி மணியன் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை ரஜினி ரசிகர்களைக் குழப்பியது. 

அந்த அறிக்கையில், ரஜினி இனிமேல் எப்போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லவில்லை. இப்போதைய சூழலில் அரசியலுக்கு வரவில்லை என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறார் என புதுத் தகவலை தமிழருவி மணியன் குறிப்பிட்டிருந்தார். மேலும், லதா ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. 

இந்த மூன்று தகவல்களும் ரஜினி ரசிகர்களைக் குழப்பிய நிலையில், ஏற்கனவே ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அரசியல் இயக்கங்களில் இணைந்து பணியாற்றலாம் என ரஜினி சொன்னதை மக்கள் மன்ற நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். ஆனால், மக்கள் மன்றம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகமால் இருந்து வந்தது.

இந்தநிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை போனில் தொடர்புகொண்டு அவரே பேசியிருக்கிறார். `ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தரமாட்டார். ரஜினிகாந்த் இந்த தேர்தலுக்கு 100% நிச்சயம் வர மாட்டார். லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக வரும் செய்தி பொய். அர்ஜூன மூர்த்தி கட்சி தொடங்கினால் நமக்கும் அவருக்கும் சம்மந்தம் கிடையாது’’ என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News