Categories: Cinema News latest news

சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படி பண்ணலாமா.?! அந்த மனுஷங்களுக்கு கொடுக்கிற மரியாதை இவ்வளவு தானா.?!

தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தும் இன்னும் தான் நம்பர் ஒன் நடிகர் என்பதை, படத்திற்கு படம் நிருபித்து வருகிறார் ரஜினிகாந்த்.  இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளது.

இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், அண்மையில் தான் அரசியலுக்கு வர போவதாகவும் அறிவித்து, பின்னர் அதிலிருந்து பின் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு தோன்றும் சமூக கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படையாக பேசவும் செய்வார்.

அப்படித்தான் பலமுறை அவரது வீட்டு வாசலில் பத்திரிக்கையாளர் மீட்டிங் நடந்துள்ளது. ஆனால் ஒருபோதும் அந்த பத்திரிக்கையாளர்களை தனது வீட்டிற்குள் அழைத்து, தனது வீட்டு வளாகத்திற்குள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை.

இதையும் படியுங்களேன் – ராஜராஜ சோழனாக அஜித்!….பக்கா ஸ்கிரிப்ட் ரெடி…ஓகே சொல்லுவாரா தல?…..

இது பற்றி பல்வேறு விமர்சனங்கள் இணையத்தில் உலா வருகிறது. பலரும் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் ஏதேனும் ஒரு பொதுவான இடத்தில் வைத்து தனது கருத்துக்களை தெரிவிப்பார். ஆனால், ரஜினி மட்டும் தனது வீட்டிற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை ஒன்றாக வைத்து அதில் பேட்டி கொடுத்துவிட்டு வந்து விடுகிறார். இதனை ரஜினி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

Manikandan
Published by
Manikandan