தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். அந்த இடத்தை பிடிக்க தான் இப்போது உச்சத்தில் இருப்பவர்களும், இனி வரபோவர்களும் போராடி வருகின்றனர். அவரை வைத்து படம் தயாரிக்க மாட்டோமா என பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
ரஜினியை வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக மினிமம் கியாரண்ட் எப்படியும் ஹிட்டாகி விடும். முதல் வாரம் ரசிகர்கள் வந்து குவிந்து விடுவார்கள். அதையும் மீறி தோல்வியடைந்தால் சில நேரம் நஷ்ட ஈடும் கொடுத்துள்ளார். அப்படி பாபா படத்தின் போது நடந்துள்ளது.
அதற்கு பிறகு பெரிதாக தோல்வி அடைந்ததாக தெரியவில்லை. பாபா படத்திற்கு பிறகு வெகு வருடங்கள் கழித்து அப்படி தோல்வியடைந்த திரைபடமென்றால், அது லிங்கா தான். இந்த படத்தின் போது நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகிஸ்தர்கள் வெளியில் சொல்லி புலம்பியுள்ளனர். அது ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
இதையும் படியுங்களேன் – ஷாருக்கான நம்பி மோசம் போன அட்லீ… மூணு வருஷம் வீணாப்போச்சே
அதனால், இப்படத்தை அடுத்து கபாலி படத்தை தயாரிக்க வந்த கலைப்புலி தாணுவிடம், ரஜினி ஒரு கண்டிஷன் போட்டாராம். அதாவது, படம் எப்படி வரப்போகிறது என்று எனக்கு தெரியாது. அது எப்படி வந்தாலும், வெளியில் விநியோகிஸ்தர்கள் சொல்ல கூடாது. அப்படி இருந்தால் நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என ரஜினி கண்டிஷன் போட்டாராம்.
அதனை அடுத்து கலைப்புலி இதற்கு சம்மதம் தெரிவிக்கவே, கபாலி படத்தில் ரஜினி நடித்தார். இதுவரை இல்லாத அளவு ப்ரோமோஷன் செய்து படத்தை வெற்றிப்படமாக மாற்றினார் கலைப்புலி தாணு. ஓரளவு லாபம் தந்த படமாகவே அது பார்க்கப்படுகிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…