Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே அமைதியாக ஞானி லுக்கில் இருப்பதை தான் இந்த டூகே கிட்ஸ் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் பாட்ஷா லெவலில் அவருக்கு ஒரு பக்கா ப்ளாஷ்பேக் இருக்கு என்ற சுவாரஸ்ய தகவல்கள் தான் தற்போது கசிந்துள்ளது.
ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த ஜெயிலர் ஆடியோ ரிலீஸில் புகைப்பழக்கம், குடியால் தான் நிறைய இழந்து விட்டேன். அதனால் அந்த விஷயங்களை தொடராதீர்கள் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் ரஜினி ஒரு காலத்தில் சேட்டை பிடித்த ஆளாக இருந்தாராம்.
இதையும் படிங்க: காஷ்மீர்ல அந்த ஹைனா சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் இவ்ளோ ரிஸ்க் எடுத்தாரா?..
ஓவர் குடியால் வீட்டுக்கு வந்தவரை அவர் அண்ணன் ஏன் இப்டி குடிச்சு உடம்ப கெடுத்துக்குற என மனம் புழுங்கி கேட்டாராம். அப்படி நிறைய கெட்ட பழக்கத்தில் இருப்பதால் முரட்டுத்தனமாகவே தான் இருப்பாராம். அதனால் அவரிடம் மற்ற விஷயங்களை குடும்பத்தினர் பேசவே யோசிப்பார்களாம்.
ரஜினி 20 வயசு இருக்கும் போது அவர் இருந்த ஏரியாவில் நாராயணன் என்ற ரெளடி இருந்து வந்தார். அவரை பார்த்தால் அந்த ஏரியாவே பயந்து இருந்து வந்தனர். அந்த சமயத்தில், மார்க்கெட் சென்ற நாகேஸ்வர ராவ்வை நாராயணன் அடித்து விட்டார். அவரும் அழுதுக்கொண்டே வீட்டுக்கு வந்து இருக்கிறார்.
ரஜினிகாந்த் அவரை அழைத்து என்ன அண்ணா ஏன் அழுதுக்கொண்டே வந்து இருக்க எனக் கேட்கிறார். அவரிடம் என்னை நாராயணன் அடித்துவிட்டார் எனக் கூறிவிட்டார். அய்யயோ அவனிடம் ஏன் டா சொன்ன என பெரிய அண்ணன் சத்யநாராயணன் பதறிவிட்டார்.
இதையும் படிங்க: ஜோவிகாவின் அப்பா இவர் தான்… அவருடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கேன்… வனிதா சொன்ன நியூஸ்..!
இதை கேட்ட ரஜினிகாந்த், கடுப்பாகி கிளம்பிவிட்டார். சத்யநாராயணன் போகாதடா என வலுக்கட்டாயமாக பண்ணியும் கேட்காமல் நேராக மார்கெட் சென்றாராம். அங்கிருந்த ஒரு கடையில் சைக்கிள் செயினை கையில் முறுக்கி கொண்டு அந்த ரவுடியை முக்கில் விட்டு அடிப்பின்னி விட்டாராம்.
அவரை அழைத்துக்கொண்டு போய் போலீஸார்கள் விசாரித்து ரஜினியின் தந்தையை பற்றி தெரிந்ததாம். ரஜினிகாந்தின் தந்தை ராமோஜி ராவின் தந்தை ஒரு ரிட்டயர்ட் போலீஸ்காரர். ஒரு போலீஸ்காரர் மகன் இப்டி சண்டை போடலாமா? பாத்து சொல்லி வையுங்கள் என அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்களாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…