
Cinema News
ஓவரா பேசிய இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த ரஜினிகாந்த்!… சூப்பர்ஸ்டார் அவ்வளவு கோபக்காரரா?!..
Published on
By
Rajinkanth: இப்போது இருக்கும் ரஜினிக்கும் இளமை காலத்தில் இருந்த ரஜினிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இப்போது இருப்பவருக்கு இருந்த அமைதி போதிய காலத்தில் ரஜினியிடம் இல்லை. தன்னுடைய டியூட்டி நேரத்தில் தன்னை அசிங்கப்படுத்திய செக்கிங் இன்ஸ்பெக்டரை துவம்சம் செய்த ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ரஜினிகாந்த் பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்த சமயம். அவர் பெரிதாக யாருடனும் சேர மாட்டாராம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாராம். அந்த சமயத்தில் அவர் பணிமனையில் ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர் இருப்பாராம். அவருக்கு கண்டெக்டர்கள் ஏமாத்தி சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம்.
இதையும் படிங்க: ரஜினியை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என அழைத்த அறிமுக நடிகை!.. பதட்டமான படப்பிடிப்பு!..
நல்ல டிரஸ், வாட்ச் போட்டுவிட்டால் உடனே நோட்டீஸ் போட்டுவிடுவார். இதனால் அந்த செக்கிங் இன்ஸ்பெக்டரைப் பார்த்தால் அங்கு இருக்கும் கண்டக்டர்களுக்கு ஒரே பயமாம். அவர் ஒருநாள் ரஜினியின் பஸ்ஸிற்கு வருகிறார். அந்த சமயத்தில் ரஜினி மூவருக்கு தவறுதலாக டிக்கெட் கொடுக்காமல் விட்டு இருக்கிறார். இதை செக்கிங் இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்து விடுகிறார்.
‘இது உங்க அப்பன் வீட்டு பஸ்னு நினைச்சியாடா? ஏன் டிக்கெட் கொடுக்கலை ?’ எனத் திட்டி இருக்கிறார். இதில் கடுப்பான ரஜினிகாந்த் ‘நான் விட்டது தப்புத்தான். ஆனால் அப்பா அம்மா பத்தியெல்லாம் இங்கே பேசாதீங்க. எனக்கு நோட்டீஸ் கொடுங்க. நான் விளக்கம் சொல்றேன்’ என்றாராம். அதற்கு ‘ என்கிட்டையே இப்படி பேசுறியா? நான் யார் தெரியுமா?’ என்று தன் பெயரைச் சொல்கிறார்.
இதையும் படிங்க: விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்ல! சாய்பாபா கோயில் இவர் கட்டியதே இல்லையாம்.. அப்புறம் எதுக்கு இந்த வேஷம்
அதுவரையில் அவரைப் பற்றி மட்டுமே கேள்விப்பட்டாராம். நேரில் பார்த்தது இல்லை. அவர்தான் என தெரிந்தவுடன் இன்னும் கோபம் அதிகமாகியதாம். அவர் திட்டிவிட்டு போனாராம். மாலையில் ரஜினி நன்றாக குடித்துவிட்டு சென்றார். பணிமனை பக்கம் சென்றாராம். அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் அங்கே இருந்தார். அவர் யூனிபார்மில் இல்லை. ரஜினி டியூட்டி முடிந்து இருந்தும் யூனிபார்முடன் இருந்தாராம்.
மேலே போட்டிருந்த தன் கோட்டைக் கழற்றி பக்கத்திலிருந்த கல் பெஞ்சின் மீது வைத்தவர். நேராக அந்தச் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் சென்று அவரை புரட்டி புரட்டி அடித்துவிடுகிறார். சுற்றி 50 கண்டெக்டர்கள் இருந்தும் எல்லாரும் சந்தோஷமாக வேடிக்கை தான் பார்த்தார்களாம். அதற்கு ரஜினிக்கு நோட்டீஸ் வந்ததாம். ஆனால், செக்கிங் இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் அணியாததாலும், அடிபட்டபோது ரஜினி டியூட்டியில் இல்லாததாலும் அந்தக் கேஸ் ஒன்றும் இல்லாமல் ஆகவிட்டதாம்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...