Categories: Cinema News latest news

படையப்பாவுக்கு பரிசாக கிடைத்த ஆறுபடையப்பா!.. சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த ஆசிர்வாதம்.. வைரலாகும் பிக்ஸ்!

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு பிறகு சென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின.

இந்நிலையில், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வரும் நிலையில்,  முருக கடவுளின் புகைப்படத்தை சாமியார் ஒருவர் ரஜினிக்கு பரிசாக வழங்கி ஆசிர்வாதம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: எத மூடினாலும் அத மூடமாட்டேன்!.. ஓப்பனா விட்டு விருந்து வைக்கும் திவ்யா துரைசாமி…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலை அசால்ட்டாக அள்ளி குவித்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் அதிக ஆர்வத்தை 72 வயதிலும் இளம் நடிகரை போல ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து கடுமையாக உழைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்த உடனே மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்த ரஜினிகாந்த் அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து ஜெயிலர் வெளியான நிலையில், இமய மலைக்கே சென்று ஏகப்பட்ட சாதுக்களின் ஆசிகளை வாங்கி மீண்டும் ஃபுல் எனர்ஜியுடன் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: லியோ FDFS பார்க்க ரெடியான ரஜினிகாந்த்!.. பின்ன அடுத்த படத்தை லோகேஷை நம்பி கொடுத்துருக்காரே!..

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு இரண்டாவது ஷெட்யூல் திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முருகர் கோயில் சாமியார் ஒருவர் ரஜினிகாந்துக்கு முருகர் புகைப்படத்தை வழங்கி ஆசிர்வாதம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த படையப்பாவுக்கு அந்த ஆறுபடையப்பன் என்றும் துணையாக இருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M