Categories: Cinema News latest news

கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லியும் ரஜினிகாந்த் செய்யாத காரியம்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருக்குறது…

ரஜினிகாந்த் தனது தொடக்க காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு விளம்பரப் படங்களில் நடித்ததில்லை. இந்த நிலையில் ஒரு சென்ட் நிறுவனத்தினர் ரஜினியிடம் விளம்பரத்திற்காக அணுகியிருக்கின்றனர். அப்போது ரஜினி என்ன கூறினார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “சிவாஜி தி பாஸ்”. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்க, ஏவிஎம் நிறுவனத்தினர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். இத்திரைப்படம் உருவாகி கொண்டிருந்தபோது ஒரு சென்ட் கம்பெனியினர் ஏவிஎம் நிறுவனத்தை அணுகி, தனது சென்ட் விளம்பரத்தில் “சிவாஜி” படத்தின் ரஜினி புகைப்படத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் என்றும் அதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்களாம்.

ஆனால் அந்த சென்ட் விளம்பரத்தில் தனது புகைப்படத்தை பயன்படுத்த ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். அதற்கு அவர் ஒரு காரணமும் கூறியிருக்கிறார். “அந்த சென்ட் விளம்பரத்தில் என்னுடைய புகைப்படம் இடம்பெற்றால் என்னுடைய ரசிகர்கள் நான் அந்த சென்ட்டை பயன்படுத்துவதாக நினைப்பார்கள். என்னுடைய ரசிகர்களை நான் ஏமாற்ற விருப்பமில்லை. அதனால்தான் நான் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. விளம்பரங்களில் என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தவும் அனுமதி தருவதில்லை” என்று கூறினாராம்.

Rajinikanth

இவ்வாறு தனக்கு கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியும் தனது ரசிகர்களை ஏமாற்ற கூடாது என்ற ஒரே காரணத்திற்காக விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார் ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: சிவாஜியே பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்!.. இது தெரியாம போச்சே!..

Arun Prasad
Published by
Arun Prasad