Categories: Cinema News latest news

ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..

Raghava Lawrance: தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் ரஜினிகாந்தின் தீவிர பக்தனும் கூட. எந்தவொரு மேடை ஏறினாலும் ரஜினியை பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் டான்ஸ் மார்டராகதான் அறிமுகமானார்.

பின் தனது முயற்சியினால் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். பார்த்தாலே பரவசம் திரைப்படம்தான் இவர் நடித்த முதல் திரைப்படமும் கூட. மேலும் இவர் காஞ்சானா, முனி போன்ற திரைப்படங்களின் மூலம் இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் இயக்கும் இத்திரைப்படங்களில் இவரே கதாநாயகனாவும் நடித்து வந்தார்.

இதையும் வாசிங்க:20 வருஷம் கழிச்சி அதே ரிஸ்க்கை எடுக்கும் சியான் விக்ரம்!.. அடுத்த பாலாவாக மாறிய ரஞ்சித்…

மேலும் இவர் தனியாக தொண்டு நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் பலபேருக்கு உதவியும் செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதற்கு நிறம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்தார். மேலும் இவர் டான்ஸ் மாஸ்டராக சினிமாவிற்குள் வருவதற்கு முன் சினிமாவில் ஆபிஸ் பாயாகதான் இருந்துள்ளார். அப்போது இவரை பார்த்த ரஜினி இவரின் நடன திறமையை கண்டு சினிமாவில் நடனமாடும் வாய்ப்பை வாங்கி கொடுத்தார்.

ராகவா லாரன்ஸுக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் எனும் ஆசை அதிகம். பல மேடைகளில் இவர் இதை ஓபனாகவே கூறியிருந்தார். ரஜினியிடமே நேரடியாகவும் கூறியுள்ளார். இவர் காஞ்சனா திரைப்படத்தை இயக்குவதற்கு முன் ரஜினியிடம் இந்த ஆசையை கூறினாராம். ரஜினியும் சரி என ஒத்து கொண்டாராம். ஆனால் ராகவா லாரன்ஸ் ஒரு நிபந்தனையும் வைத்தாராம்.

இதையும் வாசிங்க:இந்த படத்துல ஜெமினி நடிக்கக்கூடாது!.. சாவித்ரி போட்ட கண்டிஷனில் தலைதெறிக்க ஓடிய இயக்குனர்…

லார்ன்ஸ் தான் இயக்கும் திரைப்படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என ரஜினியிடம் கேட்டு கொண்டாராம். இதனால் கடுப்பான ரஜினி பின் லாரன்ஸுடன் இணைந்து நடிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டாராம். தான் வாய்ப்பு வாங்கி கொடுத்த பையன் தயாரிப்பில் தான் நடிப்பதா என எண்ணினாராம்.

அதன்பின்னும் பல மேடைகளில் ராகவா லாரன்ஸ் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என கேட்டார். தற்போது இவரின் ஆசைக்கு ரஜினி தீர்வு கொடுத்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் 171வது படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் களமிறங்க உள்ளாராம். ரஜினி தனது குருவாக இருக்கும்பட்சத்தில் ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு வில்லனாக எவ்வாறு நடிப்பார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:அந்த படத்தில இருந்து அடிச்சி பண்ணதா இது?!. தக் லைப் வீடியோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!…

amutha raja
Published by
amutha raja