விஜய் ரூட்டில் செல்ல மறுத்த ரஜினி... இதுதான் காரணமா?
கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தை முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இயக்கி கொண்டிருக்கிறார். படத்தை வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி திரைக்கு கொண்டு வரப்போகிறார்கள்.
சமீபத்தில், ஒரு மாஸான ப்ரோமோ வெளி வந்து தலைவரின் ரசிகர்களை குஷி படுத்தியது. இந்த ப்ரோமோவில் அனிருத் இசையில் உருவான தீம் மியூசிக் ஹைலைட்டாக இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து பிரம்மாண்டமாக நடத்த இதன் தயாரிப்பு நிறுவனமான 'சன் பிக்சர்ஸ்' திட்டமிட்டு வருவதாக சொல்லப்பட்டது. ஆல்ரெடி தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனும் அங்கே நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இப்போது 'ஜெயிலர் 2' ஆடியோ ரிலீஸை மலேசியாவில் நடத்த ரஜினி விரும்பவில்லையாம். ஏனெனில், விஜய் அங்கு சென்றதால் தான் ரஜினியும் அதே ரூட்டில் செல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பார்கள் என்பதால் நோ சொல்லிவிட்டாராம்.
